Flash News
  • ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
முத்துப்பேட்டை நகரில் இ.யூ.முஸ்லிம் லீக் – பொதுக்கூட்ட நிகழ்வுகள்
email

இ.யூ.முஸ்லிம் லீக் – பொதுக்கூட்ட நிகழ்வுகள்

நீதி அரசர் ரங்கநாத் மிஸ்ரா குழு அறிக்கை பரிந்துரையை ஏற்று மத்திய மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு உயர்த்தி தர வலியுறுத்த வேண்டியும், தாய் சபையின் 65 வது ஆண்டு உதய தின விழா நிகழ்ச்சியும், கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் கிடைத்த வெற்றி விழா முத்துப்பேட்டை நகரம் – ஒன்றியம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் மாபெரும் பொது கூட்டம் 1.4.2012 ஞாயிற்றுக்கிழமையன்று முகைதீன் பள்ளி திடலில் இஷா தொழுகைக்குப்பின் நடந்தது.

மாலை நிகழ்ச்சியாக, இ.யூ.முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் முத்துப்பேட்டை நகரில் ஆசாத் நகர், புதிய பேருந்து, பழைய பேருந்து நிலையம், ஆவென்னாநெனா பள்ளிக்கூடம் அருகே ஆகிய நான்கு இடங்களில் கொடியேற்று வைபவமும் நடைபெற்றது.

பொதுக்கூட்டம் நிகழ்ச்சியானது, முஹைதீன் பள்ளி வாசல் இமாம் அவர்கள் கிராஅத் ஓத, வரவேற்புரையினை ஜனாப் A. ஷேக் கமால்முகைதீன் – நகர இளைஞர் அணி அமைப்பாளர் அவர்களும், தலைமையினை ஹாஜி M. ரஹ்மத்துல்லா – இ.யூ.முஸ்லிம் லீக் நகர துணைத்தலைவர் அவர்களும் நிகழ்த்தினார்கள்.

முன்னிலையினை ஹாஜி M. முஹம்மது அலி – இ.யூ.முஸ்லிம் லீக் – மாவட்ட துணைத்தலைவர், கோல்டன் S. தம்பி மரைக்காயர் – நகர தலைவர் , ஹாஜா முஹம்மது உசேன் – நகர துணைத்தலைவர் அவர்கள் அனைவரும் ஏற்றார்கள்.

சிறப்புரையினை, திருப்பூர் M.A சத்தார் – மாநிலச் செயலாளர், அதிரை. S.S.B. நசுருதீன் – மாநில துணைத்தலைவர், திருவாரூர் மாவட்ட தலைவர். அல்ஹாஜ். M.M ஜலாலுதீன், மாநில பொருளாளர். M.S.A. ஷாஜஹான் அவர்கள் அனைவரும் ஆற்றினார்கள்.

சமுதாய தலைவர் – முனிருல் மில்லத் பேராசிரியர். ஹாஜி. காதர் மொய்தீன் மாநில தலைவர் இ.யூ.முஸ்லிம் லீக் அவர்களும் சிறப்புரையினை ஆற்றினார்கள். அவரின் உரையின் சில பகுதிகள்..
”சுதந்திரத்திற்கு முன்பும் சரி, சுதந்திரத்திற்கு பின்பும் சரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினை கலைக்க வேண்டும் என்று பல சதிகள் நடந்தன, இருப்பினும் பல போராட்டங்கள் பல இன்னல்கள் எல்லாம் கடந்து தற்போது நமது கட்சி தனித்தன்மை பெற்று விளங்குகிறது. தற்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் கிடைத்ததினை சில பேர்கள் ஏற்றுக்கொள்ளாமல் பல குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். நாங்கள் அதற்கு பயந்து துவட்டு விடாமல் வெற்றியின் பாதையினை நோக்கி பயணம் மேற்கொள்வோம்” என்றார்.

காரைக்குடி திருவாரூர் முத்துப்பேட்டை வழி அகல ரயில் பாதையின் பணி தற்போது எந்த நிலைமையில் உள்ளது என்பது பற்றி, ஹாஜி M. அப்துல் ரஹ்மான் M.A. M.P அவர்கள் – வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் – சர்வதேச காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துவார்கள் என்று அனைத்து பொது மக்களுக்கு எதிர்பார்த்தார்கள் ஆனால் நேரம் பற்றாக்குறை காரணமாக அவரால் உரை நிகழ்த்த முடியவில்லை.

செய்தி : அபு ஆஃப்ரின்

Related Articles

Share

About Author

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>