Flash News
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
தேர்வு வழிகாட்டி – தொடர் 3 – திட்டமிட்டு படித்தால் வெற்றியை  எட்ட முடியும்!
email

பொதுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்கள் திட்டமிட்டுப் படிக்க வேண்டிய நேரம் இது.

ஏற்கெனவே உங்கள் பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் படித்த பாடங்களைப் பலமுறை படித்துப் பார்த்திருப்பீர்கள். ரிவிஷன் செய்திருப்பீர்கள். இந்த சில மாத காலத்தையும் திட்டமிட்டுப் படிப்பதற்குச் செலவிடுங்கள்.

முதல் மதிப்பெண்தான் உங்கள் லட்சியமா?

அப்படியானால், உங்கள் படிப்பு முறையில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முழு மதிப்பெண் பெற வேண்டும் என்றால், எல்லாப் பாடங்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். படிக்கும்போதே, முக்கிய தகவல்களைக் கோடிட்டு வைத்துக்கொண்டு, தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளலாம். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கென தனியாக ஒரு நோட்டுப் போட்டு வைத்துக் கொண்டால் தேர்வு நேரத்தில் புரட்டிப் பார்ப்பது எளிதாக இருக்கும்.

பாடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மறைந்திருக்கும் நுணுக்கமான விஷயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். பழைய கேள்வித்தாள்கள், வகுப்புத் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, அடிக்கடி எழுதிப் பாருங்கள். இந்தப் பாடம் தேவையில்லை, அந்தப் பாடத்திலிருந்து கேள்விகள் வராது என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து ஒதுக்காதீர்கள்.

Revision

கணக்குப் பாடத்தைப் பொருத்தவரை, சூத்திரங்களை தனியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நேரத் திருப்புதலின்போது மிகவும் உபயோகமாக இருக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அல்லது வாரம் ஒரு முறையாவது இந்த சூத்திரங்களைமனப்பாடமாக யாரிடமாவது ஒப்பித்து சரிபார்க்கவும்.

கட்டுரைகளை மனப்பாடம் செய்யும்போதே, துணை தலைப்புகளை நன்கு நினைவில் பதித்துக் கொள்ளவும். தேர்வு நேரத்தில் கட்டுரை முழுவதையும் படிக்க முடியாமல் போகலாம். துணைத் தலைப்புகளை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனால்போதும், உள்ளே இருக்கும் சாராம்சம் நினைவுக்கு வந்துவிடும்.

நேர நிர்வாகம்

தேர்வு காலத்தில் நேர நிர்வாகம் முக்கியம். தேர்வு தேதிகள் தெரிந்தவுடன், மாணவர்கள் ஒரு டைம் டேபிள் போட்டுக்கொண்டு எந்தெந்தப் பாடத்துக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று பிரித்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு எத்தனை சப்ஜெக்ட்டுகள் இருக்கின்றனவோ அந்த சப்ஜெக்ட்டுகளின் எண்ணிக்கையை மனதில் கொண்டு, இந்த சில மாத காலத்தை சரிசமமாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

இந்த நாளில் இந்த சப்ஜெக்ட்டைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை உடனே படித்துவிடுங்கள். நாளை படிக்கலாம் என்று தள்ளிப் போடவேண்டாம். முயற்சி திருவினையாக்கும்.

தன்னம்பிக்கையோடு படியுங்கள். வெற்றி நிச்சயம்.

வழிகாட்டி தொடரும்

Related Articles

Share

About Author

muthupet

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>