Flash News
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
  • ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சமாக உயர்கிறது
email

புதுடில்லி : வருமான வரி விலக்கு வரம்பை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகிறது.

வருமான வரி விலக்கு வரம்பு தற்போது, ரூ.1.8 லட்சமாக உள்ளது. இதை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பார்லிமென்டரி நிலைக்குழு பரிந்துரை செய்தது. அத்துடன் 10 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு மட்டுமே, 30 சதவீத வருமான வரி விதிக்கலாம் என்றும் கூறியது. தற்போது 8 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு, 30 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது.

இதேபோல், இந்திய தொழில்கள் சம்மேளனத்தின் இயக்குனர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜியும், “தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். ரூ.2.5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதமும், 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு 30 சதவீதமும் வரி விதிக்க வேண்டும். பணவீக்கம் அதிகரித்துள்ளதைத் தவிர்க்க, இதைச் செய்ய வேண்டும்’ என, பரிந்துரை செய்திருப்பதாகக் கூறினார்.

இவற்றை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அதனால், வருமான வரி விலக்கு வரம்பு, அதிகரிப்பு மற்றும் வருமான வரி வீதங்களில் மாற்றம் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகலாம்.

Related Articles

Share

About Author

muthupet

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>