6
September , 2010
Monday

திருவாரூர் மாவட்டத்தில் ஊனமுற்றோர் உதவித்தொகை விண்ணப்பிக்க வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற ஊனமுற்றோருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானோர் விண்ணப்பிக்க வரும் 24ம்தேதி கடைசி நாள் என்று வேலைவாய்ப்பு அலுவலர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செல்லதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு சார்பில் உடல் ஊனமுற்றோருக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் கை, கால் ஊனமுற்றவர், வாய் பேச முடியாதவர், காது கேளாதவர், மன வளர்ச்சி குன்றியவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 31.12.2008 அன்று ஓராண்டுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குட்பட்டவராகவும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவம் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் மாவட்ட மறுவாழ்வு அலுவலரின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் பல்நோக்கு மறு வாழ்வு பணியாளர்களிடமும் விண்ணப்ப படிவத்தை பெற்று கொள் ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருவாய்த்துறையிடம் இருந்து சான்றிதழ் பெற்று அனைத்து அசல் கல்வி சான்றிதழ், தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பாஸ் புத்தகத்துடன் வரும் 24ம்தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 24ம்தேதி கடைசி நாள்

Leave a Reply




  (To Type in English, deselect the checkbox. Read more here)

single