6
September , 2010
Monday

இந்தியாவில் அறுபது கோடி பேருக்கும் அதிகமானவர் களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் இல்லை என்று ஐநா மன்றம் கூறுகிறது. அறுபது கோடிபேர் என்பது மிக்கப்பெரும் எண்ணிக்கை. இவர்களில் பலர் கிராமப் புறங்களில் வசிக்கிறார்கள். ஆனால் இவர்களில் பல லட்சக்கணக்கானவர்கள் நகர்ப்புற குடிசைகளில் வாழ்கிறார்கள்.

முரண்பாடுகளுக்கு பேர்போன இந்தியாவில், முறையான கழிப்பறை வசதி கொண்டிருப்பவர்களை விட அதிகமானவர்களிடம் செல்லிட தொலைபேசிகள் இருக்கின்றன. இந்தியா இது வரை அடைந்துள்ள வளர்ச்சியையும், இன்னமும் அது அடைய வேண்டிய இலக்குகளையும் இந்த முரண்பாடு விளக்குகிறது. இதன் விளைவாக பொது சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

பொதுமக்களுக்கு செல்லிடதொலைபேசிச்சேவைகளை கொண்டுபோய் சேர்ப்பதில் காட்டப்படும் உற்சாகத்தையும், அதற்கு செலவிடப்படும் சக்தியையும், கழிப்பறைகளை உருவாக்குவதில் காட்டக்கூடிய வகையான மாற்றம் இந்தியாவில் தேவைப்படுவதாக கூறுகிறார் யுனிசெப் அமைப்பின் பேச்சாளர் சாராக்ரொவ்.

இந்தியாவின் பெருநகரங்களின் தெருக்களில் ஒருவர் இறங்கி நடந்தால், இந்தியாவின் பெரும் பொருளாதார வளர்ச்சியின் உத்வேகத்தை உணர முடியும். ஆனால் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த உட்கட்டமைப்பு வசதிகள் என்பவை வெறும் நெடுஞ்சாலைகளும் மின் உற்பத்தி நிலையங்களும் மட்டு மல்லாமல், மனிதனின் அடிப்படை தேவையான கழிப்பறைகளும், சுத்தமான சூழ்நிலையை உருவாக்குவதும் இவற்றில் அடங்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்

Leave a Reply




  (To Type in English, deselect the checkbox. Read more here)

single