6
September , 2010
Monday

banner

முத்துபேட்டையை சேர்ந்த சகோதரர் முஹம்மது இதிரிஸ் இரும்பு மனிதர் (IRON MAN) என்கிற விளையாட்டு சவாலில் பங்குபெறும் முதல் இந்தியர் என்பது  அனைவரும்  அறிந்ததே

idiriz

26 பிப்ரவரி அன்று மலேசியாவில் உள்ள லங்கவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் மொத்தம் 736 போட்டியாளர்கள், 41 நாடுகளிலிருந்து கலந்து கொண்டார்கள். ஜெர்மனி , ஜப்பான் , சவுத் ஆப்ரிக்கா , நியூ சிலாந்து , அமெரிக்கா , இத்தாலி, ஆஸ்திரேலியா , பெல்சியம்   , அர்ஜேன்டினா , கனடா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து கலந்துகொண்டனர்.

536 போட்டியாளர்கள் மிகவும் வெப்பமான சூழ்நிலையில் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்தனர். இதனால் இது உலகத்திலேயே மிகவும் கடினமான சவால் என்று கருதப்படுகிறார்கள்.

முத்துபேட்டை சேர்ந்த முகமது  இட்ரிஸ் அவர்கள் இந்த சவாலை 13 மணி  55 நிமிடம்   07 வினாடியில் முடித்தார்.

3.8(Kilometer) நீச்சல்   :  1h 31m 14s

180 (Kilometer) சைக்கிள்     :  6h 44m 32s

42.2k(Kilometer)ஓட்டம்      :  5h 34m 07s

அவர் 230 ஆவது இடம் பிடித்தார். அவர் வயது (40 – 44 ) உடைய 83 போட்டியாளர்களில் அவர் 46 ஆவது இடத்தில் உள்ளார்.

முஹமது இட்ரிஸ் மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்த போட்டியை முடித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார். இவருடைய இந்த முயற்சியை கண்டு பலரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் ஆசை படுகிறார்.
இந்திய விளையாட்டு கழகம் முகமது இட்ரிஸ் போன்ற விளையாட்டு  வீரர்களை  வருங்காலங்களில்  பயன் படுத்திக்கொள்ள வேண்டும்

முஹமது இட்ரிஸ் அவர்கள் தங்கள் இணையத்தளம் முலமாக  ஈமெயில் மற்றும் போன் மூலமாகும் வாழ்த்துக்கள் தெரிவித்த  அணைத்து சகோதர்களுக்கும்  நன்றி தெரிவித்து  கொள்கிறார்

முகமது இட்ரிஸ் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவிக்கவேண்டும் என்று முத்துபேட்டை இணைய தளம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

—————————————————————————————————-

முத்துப்பேட்டையிலிருந்து  ஒரு சாதனையாளர்

—————————————————————————————————

3 Responses

  1. A.Haja-mtt Says:

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

    முத்துப்பேட்டை நண்பரின் முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்

    நண்பர் எல்லை கோட்டை அடையும் போட்டவில் நேரம் 14.09.59 என்று உள்ளது தாங்களின் தகவலில் நேரம் 13.55.07 என்று உள்ளது நேரத்தில் தவறு இருந்தால் மற்றிக்கொள்ளவும்

    அன்புடன்.
    முத்துப்பேட்டை அ.ஹாஜா…….

    Posted on மார்ச் 11th, 2010 at 1:41 pm

  2. Mohamed Idris Says:

    அலைக்கும் சலாம் நண்பர் ஹாஜா,
    இதில் முதலில் டாப் போட்டியாளர்கள் ஆரம்பிப்பார்கள் பின்னர் 15 நிமிடம் பிறகு மற்ற அனைவரும் ஸ்டார்ட் செய்யவேண்டும் இதனால் தான் நேரம் வேறுபட்டு உள்ளது.

    நன்றி.

    அன்புடன்
    முஹம்மத் இத்ரிஸ்

    Posted on மார்ச் 12th, 2010 at 7:28 am

  3. ferosh Says:

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
    சகோதரர் முஹம்மத் இத்ரிஸ் மேளும் பல போடிகளில் கலந்து வெற்றிபெற அல்லாஹ் உதவி செய்வானாக….ஆமின்

    அன்புடன்
    ஜெ.பெரோஸ்கான்
    ம.ம.க ஒன்றிய செயலாளர் கோட்டூர்.

    Posted on மார்ச் 13th, 2010 at 9:34 am

Leave a Reply




  (To Type in English, deselect the checkbox. Read more here)

single