6
September , 2010
Monday

தங்களின் வாழ்க்கைத் தரம் உயரக் காரணமாக இருந்த பள்ளிகளுக்கு, அதில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உதவி செய்து உயர்த்த வேண்டும் என கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கேட்டுக்கொண்டார்.

கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் சங்கரா நடுநிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்தி நடராஜனின் தொகுதி வளர்ச்சி நிதி மூலம் கட்டப்பட்ட வகுப்பறையைத் திறந்து வைத்து பீட்டர்அல்போன்ஸ் எம்.எல்.ஏ. மேலும் பேசியதாவது:

ஒவ்வொருவரும் தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க தவறக்கூடாது. அப்படி திரும்பிப் பார்த்து, தாம் கடந்து வந்த பாதையை சீர் செய்ய முயலவேண்டும்.

முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவிகள் செய்து அதன் தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், திருமலைக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருணாசலம், கடையநல்லூர் நகர் மன்றத் தலைவர் இப்ராஹிம், எம்.எல்.ஏ. அலுவலக மேலாளர் செல்வராஜ், நகர் மன்ற துணைத்தலைவர் காளிராஜ், ராசா கன்ஸ்ட்ரக்ஷன் மேலாளர் ரவிராஜா,

ஆணையர் அப்துல் லத்தீப், பொறியாளர் அய்யனார், நாகூர்மீரான், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அருணாசலம், நகர்மன்ற உறுப்பினர் கண்ணன், முன்னாள் ஒன்றியத் தலைவர் அய்யாத்துரை, லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply




  (To Type in English, deselect the checkbox. Read more here)

single