6
September , 2010
Monday

இஸ்தான்புல், மார்ச். 8-
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள இலாசிக் மாகாணத்தில் கோவன்சிலர் மாவட்டத்தில் அட்குலர் மற்றும் யுகாரி கனாட்லி ஆகிய கிராமங்களில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் குலுங்கின. இதை தொடர்ந்து வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பீதி அடங்காமல் நீண்ட நேரம் ரோடுகளில் அமர்ந்திருந்தனர்.
பூகம்பம் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக துருக்கியின் காந்திலி பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாஸ்யுர்த்- கரகோகனை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் பூகம்பத்தினால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. பின்னர் இதில் வீடுகள் இடிந்ததில் 17 பேர் பலியானதாகவும், 20 பேர் பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பூகம்பம் கடுமையாக இருந்ததால் சாவு எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.துருக்கியில் கடந்த 1999-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7.4 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 18 ஆயிரம் பேர் பலியாகினர்
.Posted By Kasim China 10d65125-4991-47cb-8b85-5541dd4b11a3_S_secvpf

Leave a Reply




  (To Type in English, deselect the checkbox. Read more here)

single