- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை கண்டித்து மத்திய அரசிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் விடுத்த 20.9.12 காலை 6 மணியளவிலிருந்து மாலை 6 மணிவரையிலான ”கடையடைப்பு போராட்டம்” நாடு முழுவதும் அமைதியாக நடைபெற்றது.
நமதூர் முத்துப்பேட்டையில் மக்களுக்கு அவசர தேவைக்கு உள்ள மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்து மூடப்பட்டு இருந்தன. மற்றும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் முத்துப்பேட்டையில் அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது.
வியாழக்கிழமையாக இன்று இருந்ததால் முத்துப்பேட்டை சந்தையில் காய்கறி சிறிய அளவில் வந்தன. ஆகையால் சந்தையில் சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. பெரிய கடைத்தெருவில் கோழிக்கடை, கறிக்கடை மற்றும் சிறிய கடைகள் திறந்து இருந்தன.
சி.பி.ஐ மற்றும் சி.பி.எம். கட்சிகள் மத்திய அரசினை கண்டித்து, எடையூர் – சந்கேந்தி கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தினை கே. முருகையன் – ஒன்றிய செயலாளர் – சி.பி.ஐ மற்றும் பி.என். தங்கராசு – மாவட்ட செயற்குழு – சி.பி.எம் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்த்தில் இரு கட்சிகளை சார்ந்த பலர் கலந்துக்கொண்டு தாங்களின் எதிர்ப்பு தெரிவித்தனர்.













