Flash News
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
  • ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
பிரான்ஸ் நாட்டிலும்  முகமதுநபி  கார்ட்டூனை வெளியிட்டு  அவமதிப்பு
email

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முகமதுநபி தொடர்பாக எடுத்த படத்தால் அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகளிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து நிலைமை மோசமாகி வருகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பத்திரிகை முகமது நபி கார்ட்டூனை வெளியிட்டு உள்ளது. இதனால் பிரான்ஸ் நாட்டுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்து உள்ளன. துருக்கி, துனிசியா, இந்தோனேசியா நாடுகளில் நடந்த போராட்டங்களால் அந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூடப்பட்டு உள்ளன. 20 நாடுகளில் உள்ள பிரான்ஸ் நாட்டு கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளன.

அனைத்து நாடுகளிலும் உள்ள பிரான்ஸ் தூதரகங்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும்படி அந்தந்த நாடுகளை பிரான்ஸ் கேட்டு கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் நாட்டில்தான் அதிக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வன்முறையில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக முஸ்லிம் பிரதிநிதிகளை அழைத்து பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த கார்ட்டூன் பிரச்சினையால் பிரான்ஸுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Related Articles

Share

About Author

ADN.CN

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>