- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
- ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
முஸ்லிம்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை தடை செய்ய கோரியும், அந்த திரைப்படத்தை தயாரித்த சாம் பாசைல் மற்றும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசை கண்டித்து முத்துப்பேட்டை கிளை – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் ”மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” ஆசாத் நகர் கடைத்தெருவில் 17.9.12 மாலை 4.30 க்கு துவங்கி 6 மணி முடிவுற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தினை தலைமையினை M. நெய்னா முகம்மது – ஒன்றிய செயலாளர் – தமுமுக அவர்கள் ஏற்க, முன்னிலையினை M.H. நூர்தீன் – மாவட்ட தலைவர் – தமுமுக, நாச்சிகுளம் தாஜூதீன் – தலைமை செயற்குமு உறுப்பினர், குத்புதீன் – மாவட்ட செயலாளர் – தமுமுக, சாகுல்ஹமீது – மாவட்ட பொருளாளர் – தமுமுக மற்றும் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நிகழ்த்தினார்கள்.
”நெஞ்சமெல்லாம் எரியுதே
எங்கள் உயிர் நபிகளாரை
இழிவு செய்த பாதகர்களை
நினைக்கும்போது நெஞ்சமெல்லாம்
எரியுதே..எரியுதே..”
”உலக மக்களே உலக மக்களே
மதவெறியைத் தூண்டி
உலக அமைதியைக் குலைக்கும்
அமெரிக்க பயங்கரவாதத்தை
இஸ்ரேலிய தீவிரவாதத்தை
ஒன்றிணைந்து கண்டிப்போம்..”
போன்ற கண்டன கோஷங்கள் அமெரிக்காவிற்கு எதிராக ஒலிக்கப்பட்டது.
கண்டன உரையினை, சகோதரர் S. முகமது மாலிக் – மாவட்ட செயலாளர் – மனித நேய மக்கள் கட்சி அவர்களும், தலைமை கழக பேச்சாளர் – தமுமுக சகோதரர். சிவகாசி முஸ்தபா அவர்களும் ஆற்றினார்கள். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியோர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் ஏராளமானவோர்கள் கலந்துக்கொண்டனர்.













