Flash News
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
  • ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
ஹெல்மேட் கட்டாயம் அணியவேண்டும்..
email

 

நமதூர் முத்துப்பேட்டையை பொறுத்த வரை இரு சக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. மற்றும் புறவழிச்சாலை நகர் புறச்சாலை ஆகிய பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுவதற்கு இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் காரணமாக உள்ளார்கள் என்றால் மிகையாகாது.

பல ஆயிரங்கள் கொடுத்து இரு சக்கர வாகனங்கள் வாங்கி விடுகிறோம். ஆனால் நம்முடைய உயிரை பாதுகாக்க சில நூறு ரூபாய்கள் கொடுத்து ஹெல்மேட் வாங்குவதில் ஏன் இத்தனை தயக்கமோ..?

எந்தவிதமான தலை கவசமும் இல்லாமல் செல்போனில் பேசிக்கொண்டே இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதால் நமது உயிருக்கு ஆபத்து என்பதினை நாம் அறிவதில்லை. இருப்பினும் எந்த கவலையும் இல்லை என்ற தொரணையில் ஸ்டைலாகவும், பந்தாகவும் நாம் மோட்டார் பைக் ஓட்டி வருகிறோம் அதுவும் ஒரு வாகனத்தில் மூன்று பேருடன் என்ற ரீதியில்.

கடந்த ஆறு மாத காலத்தில், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முத்துப்பேட்டை புறவழிச்சாலையில் தான் அதிகமான அளவிற்கு வாகன விபத்துகள் நடைபெற்று உள்ளதாக முத்துப்பேட்டை காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.
இந்த செய்தியினை படிக்கும் முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி இளைஞர்களே..! விலை மதிப்பில்லாத தாங்கள் உயிருக்கு தாங்கள் தான் பொறுப்பு..பிறர் பொறுப்பு ஆக மாட்டார்கள்.. ஹெல்மேட் அணிந்து இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டுமாய் www.muthupet.org சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Related Articles

Share

About Author

ABUAFRIN

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>