- முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
- முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
- தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
- ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
- அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
கடந்த 2008 ஆம் ஆண்டில் முத்துப்பேட்டையில் துவக்கப்பட்ட யின் SDPI கட்சியின் செயல்பாடுகள் பற்றியும் அவர்கள் பொது மக்களுக்காக செய்த போராட்டங்களையும், அரும் பெரும் பணிகளையும் அனைவரும் அறிவர். தற்போது அவர்கள் 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதால் மக்கள் பயன் பெறும் வகையில் பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்கள்.
21.6.2012 காலையில் முத்துப்பேட்டை SDPI யின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இரத்த வகை கண்டறியும் முகாம், மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி முஹைதீன் பள்ளி வாசல் திடலில் 11.00 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக அரபு சாகிப் பள்ளி வாசல் எதிரே, பழைய பேருந்து நிலையம் மற்றும் ஆசாத் நகர் பகுதிகளில் கட்சி கொடியினை A. அபுபக்கர் சித்திக் – மாநில செயற்குழு உறுப்பினர் அவர்கள் ஏற்றினார்கள். அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியினை தெரிவித்துக்கொண்டனர் தொண்டர்கள்.
இரத்தவகை கண்டறியும் முகாமினை, மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் துவக்கி வைத்தார்கள். பள்ளி மாணவ மாணவிகளுக்கான நோட் புத்தகம் ஆகியவற்றினை N.M.பாவா பகுருதீன் – மாவட்ட செயலாளர் அவர்கள் வழங்கினார்கள். முஹைதீன் பள்ளி ஏத்தீம்கானா மதரஸா பள்ளியினை சார்ந்த 40 மாணவர்களுக்கான நோட், பேனா, ஜாம்ட்ரி பாக்ஸ் ஆகியவற்றினை s. அப்துல் காதர் – ஏத்தீம் கானா பள்ளி இமாம் அவர்களிடம் வழங்கப்பட்டது. மற்றும் ஆவென்னா நெனா பள்ளிக்கூடத்தில் 100 மாணவ, மாணவிகளுக்கான நோட், பேனா ஆகியவைகள் பள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்டன. அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொண்டர்கள் ஏராளமாக கலந்துக்கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள்.











