Flash News
  • முத்துப்பேட்டை புதிய இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
  • முத்துப்பேட்டை இணையதளம் இப்போது புதிய வடிவில்.
  • ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒளிப்பரப்பு நமது இணையத்தளத்தில்..
  • தொடர் மின்வெட்டால் செய்திகள் சற்று தாமதம் ஆகலாம்
  • ஆசாத் நகர் ஜூம்மா பள்ளி திறப்பு விழா 28-06-2013
  • அன்புடையீர்..தாங்கள் நிறுவனத்தின் விளம்பரம் www.muthupet.org ல் இடம் பெற 8122587164 என்ற அலை பேசி எண்ணை அழையுங்கள்
தமுமுக & மமக நிர்வாகிகள் முத்துப்பேட்டை வருகை
email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

தூண்களே இல்லாத வானத்தை அமைத்து, கரங்களில் சிக்காத காற்றினை அளித்து, கருவிகளே இல்லாமல் சுழலும் பூமியை, உலகை இயக்கும் வல்லோன் அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1433 ம் ஆண்டு ஜாமதில் ஆஹிர் பிறை 21 (13.5.12) ஞாயிறு காலை 11 மணியளவில், S. செய்யது முஹம்மது அவர்களின் புதல்வன் S. முகம்மது மாலிக் மணமகனுக்கும், S. ஜாஹிர் உசேன் அவர்களின் புதல்வி J. நபீலா மணமகளுக்கும் நிக்காஹ் குத்பா பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக, தமுமுக மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமாகிய M.H ஜவாஹிருல்லா M.B.A. M.Phil., Ph.D., அவர்களும், தமுமுக மற்றும் மமக தலைவருமாகிய மவ்லவி J.S ரிபாயி அவர்களும், M. தமிமுன் அன்சாரி – பொதுச்செயலாளர் மமக அவர்களும், A. அஸ்லம் பாஷா – ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், S. ஹாரூண் ரசித் – இணை பொதுச்செயலாளர் – மமக மற்றும் மாவட்ட, நகர, கிளை தமுமுக மமக கட்சி நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.ஏ அவர்கள் நிக்காஹ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை இருப்பினும் பாராளுமன்றத்தின் 60 ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. தன்னலம் பாராமல் பொது நலனில் அக்கறைக்கொண்டு செயல்படும் தம்பி மாலிக் திருமணத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பாராளுமன்ற நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொள்ளவில்லை என்றார்.

பேராசிரியர் M.H ஜவாஹிருல்லா அவர்களும் மணமக்களை வாழ்த்தி கூறும் போது, கடந்த சுனாமில் தமுமுக கட்சி தொண்டர்களின் பணியினை அனைவரும் பாராட்டினார்கள். அதில் தம்பி மாலிக் அவர்களின் பங்கினை நான் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். ஜாதி, மத, பேதமின்றி அனைவருக்காகவும் உழைக்க மாலிக் அவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்றார்.

S. முகம்மது மாலிக் அவர்கள் திருவாரூர் மாவட்ட மமக செயலாளராக இருப்பினும், www.muthupet.org ஆசிரியர்குழுவில் அங்கம் வகித்து அரும் பணியாற்றி வருகிறார் என்பதை தெரிவித்துக்கொண்டு வாழ்த்துக்களை நாமும் தெரிவித்து கொள்வோம்.

”பாரக்கலாஹுலக வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்”


Related Articles

Share

About Author

ABUAFRIN

(0) Readers Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>